Home Contact Us



ஶ்ரீமந் நாராயணரின் விஸ்வரூப தரிசனம்!



ஸ்ரீமந் நாராயணர்



ஶ்ரீமந் நாராயணரின் விஸ்வரூப தரிசனம்!




நாம் இப்பொழுது கலி யுகத்தின் முடிவில் வாழ்கிறோம். அதர்மம் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் தர்மத்தை ஸ்தாபிக்க ஶ்ரீமந் நாராயணர் பூமிக்கு வருவதாக எல்லா மத வேதங்களும் கூறுகின்றன. அவர் நேரிடையாக வந்து 'கலி-யுகத்தை' முடித்து, 'தர்ம-யுகத்தை' நிறுவுவார்.

1. பகவான் எப்பொழுது வருவார்?

4,32,000 வருடங்கள் கெண்டது 'கலி-யுகம்' என்று சாஸ்திரங்கள் கற்றவர்கள் கூறுவார்கள். நாமும் இதை இதுவரை நம்பி வந்துள்ளோம். ஆனால் இவர்கள் காலத்தை கணக்கிடுவதில் பெரும் தவறு செய்துள்ளனர். 'அங்கானாம் வாமதோ கதி:' என்ற கணித விதியை கடைபிடிக்காத காரணத்தினால் தான் உரைகாரர்களால் ஒரு இமாலய தவறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு சரியாக வராததினால் 'திவ்ய' வருடம் என்பதை 'தைவ்ய வருடம்' என்று கொண்டு லட்சக் கணக்கில் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது. 'திவ்ய' என்பதன் பொருள் வேறு, 'தைவ்ய' என்பதன் பொருள் வேறு. ரிக் வேதத்தின் சுலோகம் ஒன்று (ரிக் வேதம் 1.16.3.10) 'திவ்ய' என்பதன் அர்த்தம் 'சூரியன்' என்று கூறுகிறது. சூரியனை அடிப்படையாகக் கொண்ட நம்முடைய பூலோக நாட்களின் கணக்கே 'திவ்ய' வருடங்கள் என்று கூறப்படுகின்றது. 'தைவ்ய' வருடம் என்பது தேவர்களின் கணக்கு.

கலி-யுகம் தொடங்கின பிறகு எத்தனை ஆண்டுகளில் 'சத்ய யுகம்' ஆரம்பிக்கும் என்று பார்ப்போம். ஶ்ரீமத் பாகவதம் இவ்வாறு கூறுகிறது: 'கலி-யுகம்' தொடங்கி நான்காயிரம் 'திவ்ய' வருடங்களுக்கு மறுபடியும் 'கிருத யுகம்' வரும். அது மனிதர்களுடைய மனம், ஆத்மா இவற்றில் ஒளியை உண்டாக்கும்.' (ஶ்ரீமத் பாகவதம் 12:2:34) மேற்கூறிய 'திவ்ய' வருடங்களோடு 'யுக சந்தியா' மற்றும் 'சத்தியாம்சங்களை' கூட்டினால், கல்கி-மகா-அவதாரம் தோன்ற வேண்டிய காலம், நாம் இப்பொழுது வாழும் காலம் தான் என்று புரிகிறது.

ஶ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம், மற்றும் மகாபாரதம் போன்ற நூல்களில் 'கலி-யுகம்' முடியும் போது இருக்கும் விசேஷ அமைப்பின் விளக்கம் பின் வருமாறு சொல்லப்படுகிறது. 'சந்திரன், சூரியன், குரு இந்த மூன்று கிரகங்களும் சமமான அம்சத்தில், பூச நட்சத்திரத்தில், ஒரே ராசியில் எப்போது கூடுகின்றனவோ, அப்பொழுது தான் 'சத்ய யுகம்' ஆரம்பிக்கும்.' நாம் தற்போது பயன்படுத்தும் பஞ்சாங்கத்திலும் பெரியதொரு தவறு உள்ளமையால், இந்த மேற்கூறிய கிரக அமைப்பை எவரும் சரிவர புரிந்து கொள்ளவில்லை. சாஸ்திரத்தில் பூமியின் நிலை பற்றி என்ன சொல்லி இருக்கிறது? பூமியின் வட கோடியிலே மேரு இருக்கிறது. அதற்கு நேர் எதிரே த்ருவ நட்சத்திரம் இருக்கிறது என்று எழுதியிருக்கிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆதியில் நேரே தான் இருந்தது. அப்புறம் பெரிய மாறுதல்கள் ஏற்பட்ட பூமி கொஞ்சம் சாய்ந்து விட்டது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நேரே சுற்றும் பம்பரமாக த்ருவ நட்சத்திரத்தை நேரே நோக்கிய நிலையில் பூமி சுற்றிய காலத்தில் வழங்கி வந்த சாஸ்திரம் இப்போது உள்ள பூமியின் மாறுபட்ட அமைப்பிற்கு பொருந்தாது. கிரக சஞ்காரமும் மாறுபட்டு காட்சியளிக்கும். தவறு நீக்கப்பட்ட பஞ்சாங்கத்தின்படி, 1987-ஆம் ஆண்டு, ஜுன் திங்கள், 13-ம் நாள், 'சத்திய யுகம்' ஆரம்பித்து விட்டது.

2. பகவான் தன்னை பூமியில் வெளிப்படுத்தும் காலத்தின் முக்கியமான அடையாளம்:

'நட்சத்திரங்களிள் சந்திரன் நான்' - ப. கீ 10:2

'சந்திரனை அடையாளமாக தலையில் கொண்டோம்' - ஶ்ரீ ருத்ரம்

'சந்திரனை காலக்குறிப்புகளுக்காக படைத்தேன்' - விவிலியம்

'இறுதி நேரம் நெருங்கிவிட்டது: சந்திரன் பிளந்து விட்டது' - குர் ஆன்

மனிதன் ஜுலை திங்கள், 21-ஆம் தேதி, 1969-ஆம் ஆண்டு, சந்திரனில் முதன் முதலாக கால் வைத்தான். இது விஞ்ஞானத்தின் மிகப்பெரிய சாதனை என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இது மாபெரும் வரம்பு மீறிய செயல் என்று வேதங்கள் கூறுகின்றன. மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட எல்லைக்குள் வசித்து இறைவனை அடைய முற்பட வேண்டும். கோடிக்கணக்கான ஏழைகள், ஒரு வேளை உணவிற்கு திண்டாடும் போது, தன் சுய பெருமையை நிலைநாட்ட மனிதன் செய்த இச்செயல் இறைவனை பெரிதும் வருந்தச் செய்துள்ளது. பகவான் தன்னை உலகிற்கு வெளிப்படுத்த இந்த நாளை தெரிந்துகொண்டார். அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநகரில் பகவான் அப்பொழுது உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தன் உரையை முடிக்கும் போது: 'இதோ! ஶ்ரீமந் நாராயணர் உங்கள் முன் நிற்கிறார்!' என்று கூறி முடித்தார். இதைக் கேட்ட பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். இதை தெய்வீக அடையாளமாக கருதினர்.

இந்த சம்பவத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர், உலக சரித்திரத்தில், மிகப்பெரிய இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஜுன் மாதம், 18-ஆம் தேதியில், பகவான், தனது பக்தர் ஒருவருடைய இல்லத்தில் ஆன்மீக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவருடைய திருவுருவம் 'விஸ்வ ரூபமாக' மாறியது. பக்தர்கள் மத்தியில் பகவான் தேஜோமயமாக நின்று கொண்டிருந்தார். அவருடைய கண்களிலிருந்து நெருப்பு ஜுவாலை வெளிப்பட்டது. அங்கு குழுமியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து விட்டனர். பின்பு மிகுந்த நடுக்கத்துடன் பகவானை உற்று நோக்கினர். அவருடைய கண்களிலிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஆற்றல் குழுமியிருந்த அனைவரையும் தனக்குள் இழுத்தது. இந்த தெய்வீக சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே, மின்னல் பேரொளியாக வெட்டியது, இடி பேரிரைச்சலுடன் முழங்கியது. பூமி அதிர்ந்தது, காற்று சூராவெளியாக மாறியது. இயற்கையும் அவர் யார் என்பதை புரிந்து கொண்டு தன்னை படைத்த ஆண்டவனுக்கு வணக்கம் செலுத்தியது. இயற்கையின் இந்த உறுதி மொழியைக் கண்டு அநேகர் ஆச்சரியப்பட்டு பகவானை கைகூப்பி வணங்கினர். அவரிடம் முழு சரணாகதி அடைந்தனர். இயற்கையின் அடையாளத்தோடு கூடிய இந்த 'விஸ்வ ரூப தரிசனம்' சுமார் ஓரு மணி நேரம் நீடித்தது. பிறகு பகவான் தன்னுடைய சாதாரண உருவத்தில் தோன்றினார்.

3. எல்லா மத வேதங்களில் 'மறை பொருளாக' வைக்கப்பட்ட பரம இரகசியங்களை வெளிப்படுத்துதல்:

இதன் பிறகு, ஶ்ரீ 'லஹரி கிருஷ்ணா' இந்தியாவிற்கு வந்து, தாமிரபரணி நதி பாயும் நெல்லையில் பதியிட்டு, வேதங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தினர். இது வரைக்கும் யாரும் உபதேசிக்காத 'சாகாகலையை' உபதேசித்தார். இறந்தவர்கள் பலரை எழுப்பி, தமது அதியற்புத சக்தியை காட்டினார். தமது 'ஹஸ்த ஸ்பரிசத்தினால்' அநேகருக்கு 'மன சாந்தியை' நொடியில் அருளினார்.

4. பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணாவை ஏற்றுக் கொள்வதால் நாம் அடையும் ஆசீர்வாதங்கள்:

(அ) ஜென்ம கரும வினைகள் மிக சுலபமாக நீங்கி, 'மஹா சாந்தியை' நொடியில் பெறலாம். அவரது 'ஹஸ்தஸ்பரிசம்' உங்கள் ஐம்பொறிகளை அடக்கி ஆள சக்தியை அளிக்கும்.

(ஆ) மிக விரைவில் வரப்போகும் கலி-புருஷனின் கொடிய ஆட்சியிலிருந்து தப்பிக்கலாம். சத்திய யுக பிரஜைகளாக இனிது வாழலாம்.

(இ) எந்த விதமான கஷ்டத்திலிருந்தும், வறுமையிலிருந்தும், ரோகங்களிலிருந்தும், தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்தும் நொடியில் விடுதலை பெறலாம்.

(ஈ) அவர் உபதேசித்த 'சாகாகலையை' பிரேமபக்தியோடு பயின்று, செயல்முறைப்படுத்தினால், மரணத்தை வென்று, தெய்வீக சரீரம் பெற்று, 'ஶ்ரீ வைகுண்டம்' பறந்து செல்லலாம்.




பிரார்த்தனை (7 முறை தினமும் உச்சரிக்கவும்)




என்னை படைத்த தெய்வமே - ஶ்ரீமந் நாராயணா!

பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா!

நீங்கள் என்னை காப்பாற்ற பூமியில் வந்திருப்பதை நான் நம்புகிறேன்!

எனக்கு மஹா சாந்தியை தாருங்கள்!

என் உடம்பில் உள்ள எல்லா தீய சக்திகளையும் நீக்கவும்!

மறுபடியும் அவைகள் என்னுள் வராமல் காக்கவும்!

என் வாழ்க்கையின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவும்!

நன்றி நமஸ்காரம் ஸ்தோத்திரங்கள்!

நன்றி நமஸ்காரம் ஸ்தோத்திரங்கள்!

"எல்லாத் தர்மங்களையும் விட்டு என்னை ஓருவனையே சரணமாக அடைவாயாக! நான் உன்னை சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருத்தப்படாதே!"

- ஶ்ரீமத் பகவத் கீதை 18:66.



இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.

எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!

ஓம் நமோ பகவதே ஶ்ரீ லஹரி கிருஷ்ணாய !!