Home Contact Us



 ஸ்ரீமந் நாராயணரின் பூலோக விஜயம் 



ஶ்ரீமந் நாராயணர்



கல்கி-மகா-அவதாரம்




1. கர்மங்கள் தொலைவது எப்படி?

எல்லா துன்பங்களுக்கும் காரணம் நமது கர்மங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். கர்மங்கள் இரு வகைப்படும். அவை ஜென்ம வினை, கர்ம வினை எனப்படும். ஜென்ம வினை நாம் ஜென்மம் எடுக்க வழி வகுத்தது. கர்ம வினை நாம் இந்தப் பிறவியில் செய்வது. இவ்விரண்டு வினைகளின் தாக்கத்தால் நாம் ஒவ்வொரு நாளும் நசிந்து போகிறோம். பிறவி, பிணி, மூப்பு, மரணம் என்ற கொடிய சுழலில் மாட்டி அல்லலுருகிறோம். காசிக்கு போனாலும் கர்மம் தொலையாது, எல்லாம் என் தலை விதி, என் நேரம் சரியில்லை, போன்ற கருத்துக்களை நாம் ஒவ்வொரு நாளும் கேட்டு பழகிவிட்டோம். கர்மத்தின் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இதற்கு வேறு வழியே கிடையாது என்பது நமது சித்தாந்தமாகிவிட்டது. ஈஸ்வரனே வந்தாலும், நமது வினைகளை நீக்க முடியாது, நமது தலை எழுத்தை மாற்ற முடியாது என்று நம்புகிறோம். விதியை வெல்ல யாராலும் முடியாது என்று நினைக்கிறோம். மதியும் விதி வழி தான் செல்லும் என்று நம்புகிறோம். இதனால் மிகவும் சோர்வடைந்து, கர்மத்தின் பயனை அனுபவிக்க துணிகிறோம். இந்த மனோபாவம் பண்டிதன் முதல் பாமரன் வரை பரவி நிற்கிறது. கர்மங்களை தொலைக்க வழியே கிடையாதா? கர்மங்களின் பலனை நாம் கட்டாயம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமா? இந்த கேள்விக்கு சரியான விடையை காணாவிட்டால் நாம் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்து விடுவோம். இந்த விடையை எங்கு காண்பது? ஒரு ஜீவாத்மாவின் கர்மங்களை முற்றிலும் ஒழிக்கும் ஆற்றல் யாருக்கு உள்ளது? தொன்று தொட்டு தோன்றிய இறைவனின் அவதாரங்கள் நம் கர்ம வினைகளை ஒழிக்க முடியுமா? அவதாரங்கள் நமது கர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றால் நாம் இது வரை பிறந்து, இறந்து அல்லலுறுவது ஏன்? நமது புலன்களின் மீது நமக்கு பூரண வெற்றி ஏன் கிடைக்கவில்லை? இறைவனின் அவதாரங்களாலும் சாதிக்க முடியாததை யாரால் சாதிக்க முடியும்? அவதாரங்களே வினைப்பயனை அனுவித்ததாக இதிகாச புராணங்கள் கூறுகின்றன. இது உண்மை என்றால், அவதாரங்கள் யார்? அவதாரங்கள் முழுமுதற்கடவுளா? அல்லது அவரால் அனுப்பப்பட்ட தூதுவர்களா?

2. ஶ்ரீமந் நாராயணருக்கும் அவரால் அனுப்பப்பட்ட அவதாரங்களுக்கும் உள்ள வேற்றுமை:

இந்த வேற்றுமை அநேகருக்கு தெரியாது. அவதாரங்கள் முழுமுகற் கடவுள் அல்ல. அவரால் அனுப்பப்பட்ட தூதுவர்கள். இவர்கள் இறைவனின் ஆற்றலில் ஒரு சிறு அம்சத்தை மாத்திரம் பெற்றவர்கள். இவர்கள் அனுப்பப்பட்ட நோக்கமும் காலமும் முடிந்தவுடன் சாதாரண மனிதர்களைப் போல் மரிப்பார்கள். இதனால் தான் இவர்களால் மக்களின் கர்மங்களை நீக்க முடியவில்லை. இந்த ஆற்றல் முழுமுதற்கடவுளான ஶ்ரீமந் நாராயணர் ஒருவருக்கு மாத்திரம் தான் உள்ளது.

3. முழுமுதற்கடவுளான ஶ்ரீமந் நாராயணர் பூமியில் எப்பொழுது தோன்றுவார்? எங்கே தோன்றுவார்?

கலி யுகத்தின் முடிவில், ஶ்ரீமந் நாராயணர் நேரடியாக தோன்றுவார் என்று வேதங்கள் கூறுகின்றன. இவர் திராவிட தேசத்தில், தாமிரபரணி நதி பாயும் பகுதியில் வருவார் என்பது சாஸ்திரங்களின் கூற்று. இவர் பிறப்பு, பிணி, ழூப்பு, மரணம் முதலியவற்றிற்கு காரணமான ஜென்ம, கரும வினைகள் தொலைத்து, தன்னை பிரேம பக்தியோடு முற்றிலும் சரணமடையும் பக்தர்களுக்கு சாகா வரம் அளிப்பார். இவர்கள் மறுரூபமாகி, சிரஞ்சீவியாக, ஶ்ரீ வைகுண்டம் பறந்து செல்வார்கள். மற்றவர்கள், சத்திய யுக பிரஜைகளாக பூமியில் மிகவும் சுபிட்சமாக வாழ்வார்கள்.

4. ஶ்ரீமந் நாராயணரை சரணடைவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:

இவரை இதய தெய்வமாக ஏற்றுக்கொண்டால் ஜென்ம, கரும வினைகள் பறந்து ஓடி விடும். இவருடைய திருநாமத்தை உச்சரித்தால், மன சாந்தி நொடியில் கிட்டும். இவருடைய திருவுருவை நினைந்து, பிரேம பக்தியோடு வணங்கினால் தீராத நோய்கள் நீங்கிவிடும்.

சரீர அவயவங்களை இழந்தோர் புதிய அவயவங்களை பெறலாம். துர்தேவதைகள், பேய், பிசாசுகள், பூத, பிரேதங்கள், பில்லி சூனியம், மாந்த்ரீகம் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. வறுமை நீங்கி, சுபிட்சம் நம்மை தேடி, ஓடி வரும். நமது சந்ததி நெறி தவறாமல் தழைத்து வரும். கிரகங்கள் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாத. எல்லா நலமும் நம்மை வந்தடையும்.




இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!




ஓம் நமோ நாராயணா!