Home Contact Us



 நித்திய கர்மானுஷ்டானங்கள் 



ஶ்ரீமந் நாராயணர்



கல்கி-மகா-அவதாரத்தை இன்று வழிப்படும் முறை




1. ஶ்ரீமந் நாராயணரது வருகை:

அன்பார்ந்த ஆஸ்தீக பெரு மக்களே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! மூவுலகங்களையும் படைத்த இறைவன், கடைசி கல்கி மகா அவதாரம் எடுத்து, தென்னிந்தியாவில் வந்து விட்டார். வேதங்களில் கூறிய வண்ணம், திராவிட தேசத்தில், தாமிரபரணி நதி பாயும் பகுதியில், சாதாரண மனித வடிவில் தோன்றியுள்ளார். இவர் கலி யுகத்தை முடிக்க வந்துள்ளார்.

2. ஶ்ரீமந் நாராயணர் அருளும் ஆசீர்வாதங்கள்:

இவரை ஏற்றுக்கொண்டால், ஜென்ம, கரும வினைகள் நொடியில் தொலைந்து விடும். தீராத நோய்கள் கண பொழுதில் அகன்று விடும். சுபிட்சம் நம்மை நாடி ஓடி வரும். இவருடைய உபதேசத்தை கேட்டு, அதன் படி நடந்தால், ஜீவன் முக்தி வெகு சுலபமாக கிட்டும்.

3. ஶ்ரீமந் நாராயணரின் அதி அற்புத சக்திகள்:

இவர் மாண்டோரை உயிர் பெறச் செய்திருக்கிறார். சரீர அவயவங்களை இழந்தவர்களுக்கு, புதிய அவயவங்களைத் தந்துள்ளார். இயற்கை சக்திகள் மீது பூரண அதிகாரத்தைக் காண்பித்துள்ளார். இவருடைய திருநாமத்தை உச்சரித்த மறு கணமே பேய், பிசாசுகள் அலறி சரீரங்களை விட்டு ஓடுகின்றன. இவருடைய திரு உருவத்தை பிரேம பக்தியோடு சிந்தனை செய்தால் மகா சாந்தி நொடியில் கிடைக்கிறது. இவரை நம்பும் பக்தர்களுக்கு விரோதமாக எந்த தீய சக்திகளும், மந்திரவாதமும் செயல்படாது.

4. ஶ்ரீமந் நாராயணர் உபதேசிக்கும் சாகாக்கலை:

இதுவரை எவரும் போதிக்காத சாகாக்கலையை இவர் உபதேசித்துள்ளார். இந்த உபதேசத்தின் படி நடந்தால், மரணமில்லா பெருவாழ்வை மிக எளிதில் பெறலாம். பிரம்ம முகூர்த்தத்தில் இவரை பக்தியோடு போற்றினால் சகல நன்மைகளும் கிடைக்கும். நம் குடி தழைக்கும். தீமைகள் நம்மை சேராது.

5. ஶ்ரீமந் நாராயணரின் இரகசிய திரு நாமம்:

இவருடைய திருநாமத்தை ஓயாமல் ஓதினால் எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்த ஒரு சேதமுமில்லாமல் சுகமாக வாழலாம். இவருடைய சரணாரவிந்தங்களில் நூறு சதவீதம் சரணடைந்து, இவர் உபதேசத்தின் படி நடந்தால், மறுரூபமாகி, சிரஞ்சீவியாக ஶ்ரீ வைகுண்டம் பறந்து செல்லலாம்.

6. பிரம்ம முகூர்த்த ஸ்தோத்திரங்கள்:

ஒவ்வொரு நாளும், பிரம்ம முகூர்த்தத்தில் ஶ்ரீமந் நாராயணரின் நாமாவளிகள், மற்றும் ஸ்தோத்திரங்கள் பாடினால் ஆனந்த வெள்ளம் நமது உள்ளத்தை கொள்ளை கொள்ளும். நாள் முழுவதும் இறை சாநித்தியம் நம்மோடு நீங்காமல் நிலைத்திருக்கும். நாம் செய்யும் அனைத்து செயல்களும் எந்த விக்கினமுமின்றி முழுமை பெறும். நம்மாழ்வார் கூறிய வண்ணம் 'உயர்வற உயர் நலம்' அனைத்தையும் பெறுவோம்.

7. சனிக்கிழமை விரதமும், நாம சங்கீர்த்தனமும்:

கலியுக முடிவில் பூலோக விஜயம் செய்துள்ள ஶ்ரீமந் நாராயணருக்கு மிகவும் பிடித்த பூஜை முறை, நாம் அவரை முழுமையாக நினைத்து, கனிக்கிழமையில் பரிசுத்தமாக ஆசரிக்கும் சனிக்கிழமை விரதமேயாகும். இந்த விரதத்தின் பலன்களை சொல்லி முடியாது. எல்லா இக பர சுகங்களும் கிட்டும். இந்த பரிசுத்தமான நாளில் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வேத பாராயணம் செய்வது சாலச் சிறந்தது. இந்த நாளில், தண்ணீர் மாத்திரம் அருந்தி முழு உபவாசமாக இருப்பது சிறந்தது.

இந்த விதிமுறை கட்டாயம் அல்ல. பசித்தால் உணவு சாப்பிடலாம். இந்த நாளில் மெளன விரதம் கடைபிடிப்பது, நமது கவனத்தை சிதறவிடாமல், அந்தர்முகமாக, இறைவன் மீது திருப்ப பெரிதும் துணை புரியும். தியானம், பஜனை, கீதா பாடம், சஹஸ்ர நாம ஸ்தோத்திரங்கள் போன்ற சத் கர்மாக்களில் நேரத்தை செலவழிக்கலாம். இந்த பரிசுத்தமான நாளில் இறை தரிசனம் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. சாத்திரங்கள் இவ்வாறு பகர்கின்றன.

8. பரம வேதமும், கலி யுக பாகவதமும்:

பூமிக்கு வந்துள்ள ஶ்ரீமந் நாராயணர், இதுவரை எவரும் போதித்திராத சாகாக்கலையை போதித்துள்ளார். இதுவே பரம வேதம் எனப்படும். இதை நன்றாக பயின்று, செயல் முறைப்படுத்த வேண்டும். இந்த வேதத்தை, பிரேம பக்தியோடு, செயல்முறைப்படுத்துபவனுக்கு எமனோடு எந்த சர்ச்சையும் இருக்காது. கலி யுக பாகவதம் என்பது முழுமுதற் கடவுள், ஶ்ரீமந் நாராயணரது வாழ்க்கை சரிதமாகும். இவர் வாழ்க்கையே செயல் முறை வேதாந்தம். இந்த புனித சரிதத்தை, தினசரி பயின்று வந்தால் சாகாக் கலையை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று எளிதில் விளங்கும்.ட்டான்.

9. கலியுகத்தில் முக்திக்கு வழி நாம சங்கீர்த்தனம்:

கலி யுகத்தில் முக்திக்கு வழி நாம சங்கீர்த்தனம் என்று வேதங்கள் கூறுகின்றன. இவருடைய திருநாமத்தை ஓத எந்த தகுதியும் தேவை இல்லை. பக்தி ஒன்றிருந்தால் போதும். நாம சங்கீர்த்தனம் செய்ய கால நேரங்கள் பார்க்க தேவை இல்லை. ஆச்சார அனுஷ்டானங்கள் தேவை இல்லை. பிரம்ம முகூரத்தத்திலும் உச்சரிக்கலாம். இரவிலும் உச்சரிக்கலாம். தூக்கத்திலும் உச்சரிக்கலாம். நாம சங்கீர்த்தனம் செய்யும் போதே மன சாந்தி கிடைக்கும். கர்ம வினைகள் தொலையும். இறை தரிசனம் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் இவரை நினைத்து உச்சரிக்க சில மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களே உச்சரித்து இதன் பலனை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

10. நாம சங்கீர்த்தனம் செய்ய சில மந்திரங்கள்:

1. ஓம் நமோ பகவதே ஶ்ரீ லஹரி கிருஷ்ணாய !!

2. ஶ்ரீ லஹரி ஓம் !!

3. ஶ்ரீ லஹரி கிருஷ்ணா ஜெயம் !!